முக்கியச் செய்திகள் தமிழகம்

சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் பிபின் ராவத்; ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், தன்னுடைய வியூகத்தால் சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த பிபின் ராவத் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இந்திய ராணுவத்தில் பிபின் ராவத் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது எனவும் அவர் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் பாராட்டினார்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், தன்னுடைய வியூகத்தால் சீன ராணுவத்தை பின் வாங்கச் செய்தவர் என்றும் ஆளுநர் புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
SHARE

Related posts

12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

Halley Karthik

வெள்ளை மாளிகையில் தமிழ் மகள்!

Jeba Arul Robinson

ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் முடிவெடுத்து விட்டனர்: ஸ்டாலின்

Ezhilarasan