முக்கியச் செய்திகள் தமிழகம்

பேருந்து கண்ணாடி உடைப்பு; மாணவனை திருக்குறள் எழுதவைத்த அதிகாரி

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவனை காவல்துறையினர் திருக்குறள் எழுதவைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து சிரஞ்சீவி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கண்ணாடியை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞனை பட்டாமிராம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இளைஞன் என்று கூறப்பட்டவர், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் என்றும் பேருந்து மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தவில்லை என்றும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் லாரன்ஸ் மாணவனை திருக்குறளை எழுதும் படி கூறினார்.

பின்னர் மாணவனுக்கு அறிவுரை கூறி ஆத்திச்சூடி புத்தகத்தை வழங்கி, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தார்.

Advertisement:
SHARE

Related posts

ஆகாயத்திலும் இனி அலுவலக வேலை செய்யலாம்!

எல்.ரேணுகாதேவி

“சம்பவம் நடந்த பகுதிக்கு பிரதமர் செல்வாரா?” -பிரியங்கா காந்தி

Halley Karthik

கீழடியில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் மு.க.ஸ்டாலின்

Halley Karthik