சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், கொள்ளிடம், திருமுல்லைவாசல், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் காலை நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்வதோடு பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது .

பனிபொழிவினால் இளம் சம்பா பயிர்களில் நோய் தொற்று ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலுக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் பனி மூட்டத்தால் சிரமம் அடைந்துள்ளனர் .







