கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – #IMD எச்சரிக்கை!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக இருக்கும் வளிமண்டல காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பவ்வேறு இடங்களில்…

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாக இருக்கும் வளிமண்டல காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பவ்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நவ.9 ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், கேரளாவில் அடுத்து 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ #Thandel’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இது தொடர்பாக வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

” மன்னார் மற்றும் இலங்கை ஜலசந்தி, தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதி, தெற்கு அரபிக்கடலின் நடுவே என மூன்று பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். அடுத்த 3 மணி நேரத்தில் கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதையடுத்து, நவ. 8ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களிலும், நவ. 9ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களிலும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.