இந்தோனேசியாவில் தொடர் கனமழை – பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர்…

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.  இந்த கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால்,  பெசிசிர் செலாட்டான்,  படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.  இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.  மேலும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  மேலும், 2 பேர் காயமடைந்ததாகவும், 11 பேர் மாயமானதாகவும் கூறப்படுகிறது.  மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.