வடமாநிலங்களில் தொடரும் கனமழை பாதிப்பு : மாநில அரசுகளிடம் நிலைமையை கேட்டறிந்தார் பிரதமர் மோடி.!

வடமாநிலங்களில் தொடரும் கனமழை பாதிப்புகளை மாநில அரசுகளிடம் நிலைமையை பிரதமர் மோடி கேட்டறிந்தார் . இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப்…

வடமாநிலங்களில் தொடரும் கனமழை பாதிப்புகளை மாநில அரசுகளிடம் நிலைமையை பிரதமர் மோடி கேட்டறிந்தார் .

இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு, கின்னவுர் மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் கடைகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்திற்கு  வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல  உத்தர காண்டில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை தாண்டி செல்கிறது. அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. கன மழையில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வடமாநிலங்களில் தொடரும் கனமழை பாதிப்புகள் மாநில அரசுகளிடம் நிலைமையை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.