இந்நிலையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது.குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் : ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்
குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். அருவியில் குளிக்கவும், குளு குளு சாரல் காற்றை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்வது…
குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும். அருவியில் குளிக்கவும், குளு குளு சாரல் காற்றை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு செல்வது உண்டு. இந்த ஆண்டுக்கான சீசன் சற்று தாமதமாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளது.இதனையடுத்து நேற்று இரவு முதல் ஆர்பரித்துக்கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். . குற்றலாத்தில் சீசன் களைகட்டும் நிலையில் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்துள்ளது.






