வெளுத்து வாங்கும் கனமழை ; நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை..?

தொடர் மழை காரணமாக நாளை 2 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்க கடலில் உருவான கடந்த 27 ஆம் தேதி டிட்வா புயலானது தமிழகத்தில் ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னைக்கு அருகில் நிலையில் கொண்டுள்ளதால் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே நேற்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனால் அம்மாவட்டங்களில் நேற்று தொடர்ந்து மழை கொட்டி வந்தது. இன்றும்  வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12.2025) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.