திருப்பூரில் திடீரென பெய்த கனமழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த…

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக வாட்டிவதைத்து வருகிறது. இன்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதையும் படியுங்கள் : தந்தையை இயக்கும் மகன்! – மகிழ்ச்சியின் உச்சத்தில் மனோஜ் பாரதிராஜா

இந்நிலையில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மேகங்கள் சூழ்ந்து, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மழை பெய்துள்ளதால், அப்பகுதியினர் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

  • அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.