உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த கன மழை…வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், வளிமண்டல மேலடுக்கு…

மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தென் மாவட்டங்களிலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள மதுரை உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டப்பநாயக்கணூர், பூச்சிபட்டி, நக்கலபட்டி, உத்தப்பநாயக்கணூர், வெள்ளைமலைப்பட்டி, போத்தம்பட்டி, வகுரணி, வாலாந்தூர், கருமாத்தூர், செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

கன மழை காரணமாக சாலைகளில் சென்ற நீரில் முகப்பு விளக்குகளை எரிய வைத்து வாகன ஓட்டிகள் ஊர்ந்து கொண்டே சென்றனர். தொடர்ந்து, மாலை பள்ளி, கல்லூரி முடிந்து மாணவ மாணவிகள் வீடு திரும்பும் நேரம் என்பதால் போதிய பேருந்துகள் இல்லாமல் மழையில் நனைந்த படி மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்.

மேலும் காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை நேரத்தில் பெய்த கன மழையால் உசிலம்பட்டி பகுதியில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.