திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் லேசான துாரலுடன் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு வெளுத்து வாங்கியது.
இதனால் அம்மாவட்டத்தில் உள்ள, ஏந்தல், சோமாசி பாடி, அடியண்ணாமலை, வேங்கிக்கால், கீழ்பெண்ணாத்துார், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
—-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: