முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

4 மாதங்களுக்குள் புனித குர்ஆனை கையால் எழுதிய கல்லூரி மாணவி! குவியும் பாராட்டுகள்!

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை 4 மாதங்களிலேயே கையால் எழுதி சாதனை படைத்த காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா என்ற கல்லூரி மாணவி தனது கையால் திருக்குர்ஆனை 4 மாதங்களுக்குள் எழுதி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சலீமா குர்ஆனை கம்ப்யூட்டர் மூலம் எழுதுவது போல் அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறுகிய காலத்திற்குள் திருக்குர்ஆனை தன் கையால் எழுதி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார் சலீமா. இதுகுறித்து சலீமா கூறுகையில், எனது தாத்தா, பாட்டி குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் குழந்தைகளும் திருக்குர்ஆனை நன்றாக படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தனர்.

“வீட்டில் நிலவும் மதச்சூழல் காரணமாக, திருக்குர்ஆனை மனனம் செய்ததுடன், குர்ஆனை எழுதும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டேன். 2022 நவம்பர் 5ல் திருக்குர்ஆனை எழுதத் தொடங்கிய நான், இன்று அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறேன். தினமும் காலையிலும், மாலையிலும் கல்லூரி படங்களை படித்து முடிந்ததும், திருக்குர்ஆனை எழுதுவது வழக்கம். இந்த நேரத்தில், பெற்றோர் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

“திருக்குர்ஆன் எழுதும் போது எனக்கு என்ன தேவையோ, அவை அனைத்தையும் எனது குடும்பத்தினர் வாங்கி கொடுத்தனர். முதலில் அப்பகுதி மௌலவி சாஹிப்கள் மூலம் திருக்குர்ஆனை படிக்க கற்றுக் கொண்டேன். திருக்குர்ஆன் பற்றிய அனைத்து வகையான அறிவையும் வளர்த்து கொண்டேன். அதன் பிறகு முதலில் குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் கையால் குர்ஆனை எழுத ஆரம்பித்தேன். கடைசியில் சுமார் நான்கு மாதங்களில் குறுகிய காலத்தில் இந்த வேலையை முடிக்க முடிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சலீமா கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹரியானா விவசாயிகள் மீது தேசத்துரோக வழக்கு

Halley Karthik

ஏன் திமுகவிடம் ஆட்சியைக் கொடுத்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் – டிடிவி தினகரன்

Web Editor

பச்சை நிறமாக மாறிய கன்னியாகுமரி கடல்; அச்சத்தில் மீனவர்கள்

EZHILARASAN D