கொடைக்கானலில் தொடர் கனமழை!

கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலம் இடிந்து வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கொடைக்கானலில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் தொடர்சியாக சுமார்…

கொடைக்கானலில் பெய்த தொடர் கனமழை காரணமாக பாலம் இடிந்து வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் தொடர்சியாக சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்த்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பாலம் இடிந்து விழுந்தது.

இதனால் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீருடன் சாக்கடை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பாலத்தின் மதகுகள் மற்றும் சேதமான தாங்கு சுவர்களை சீரமைத்தனர். நகராட்சி பணியாளர்களும், தன்னார்வலர்களும் இணைந்து வீட்டிற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.