சென்னை விமான நிலையத்தில் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வந்த அனைத்து பயணிகளிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, தென் ஆப்பிரிக்கா நாட்டின், ஜோகன்ஸ்பர்க் நகரில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக சென்னை வந்த இரண்டு பயணிகளை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களின் உடமைகளில் மறைத்து வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 புள்ளி 6 கிலோ ஹெராயின் போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரண்டு பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







