முக்கியச் செய்திகள் தமிழகம்

5 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்

சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரக்கூடிய நிலையில், தற்போது அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளது.

வரும் 31ம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மணிக்கு 50கிமீ வேகத்தில் சூறைகாற்று வீசம் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

உலகம் முழுவதும் ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை – ஐநா தகவல்

Saravana Kumar

மாணவர்களிடம் பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்

Halley karthi

எத்தனை தை பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது; அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்!

Saravana