ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள்

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளியுடன் வெற்றிக் கணக்கை தொடங்கியது இந்தியா

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது.

நேற்று நடந்த (ஆக.28) நடந்த அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பென். ஆட்டத்தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனையை பவினா ஆட்ட இறுதியில் 3-2 செட் கணக்கில் வென்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சீன விராங்கனை ஜோவ் இங்-கிடம்
3-0 செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து பவினாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தெலங்கானாவில் நாளை முதல் பொது ஊரடங்கு முழுமையாக ரத்து

Halley karthi

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

Halley karthi

வைரலான ரேஸ் வீடியோ,வளைத்து பிடித்த போலீஸ்

Vandhana