முக்கியச் செய்திகள் சினிமா

‘மழை பிடிக்காத மனிதனி’ல் விஜய் ஆண்டனியுடன் இணையும் சரத்குமார்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படத்தில், சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், ’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ படம் மூலம் இயக்குநர் ஆனார். இதையடுத்து கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கிய அவர், இப்போது சிவராஜ்குமார் நடிக்கும் கன்னடப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இது விஜய் ஆண்டனி நடித்த ’சலீம்’ படத்தின் அடுத்த பாகம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆக்ஷன், கமர்சியல் படமாக உருவாகவுள்ள இந்தப் படம், முதல் முறையாக டாமன் அண்ட் டையூ பகுதியில் படமாக்கப்படுகிறது. விஜய் ஆண்டனி ஜோடியாக, மேகா ஆகாஷ் நடிக்கிறார். சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். கன்னட நடிகர்களான தனஞ்செயா, ப்ருத்வி அம்பர் இந்தப் படம் மூலம் தமிழுக்கு வருகின்றனர். மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் உட்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் மில்டன்

இந்தப் படத்தை எழுதி இயக்கி விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். பாடல்களுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார். கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி, பங்கஜ் போஹ்ரா, எஸ் விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Advertisement:
SHARE

Related posts

கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Ezhilarasan

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ.200 கோடி மோசடி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Gayathri Venkatesan

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

Niruban Chakkaaravarthi