ஃபிஃபா 2026 உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 12 பிரிவுகளில் 48 அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் சுற்றில் மெக்சிகோ – தென்கொரியா அணிகள் மோதின. மெக்சிகோவில் உள்ள குவாடலஜாராவில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தன. இந்நிலையில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல் கணக்கில் இருந்தது.
ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் மெக்siகோ வீரர் ‘லூய்ஸ் ரோமா’ ஒரு கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளும் ஆட்டத்தின் இறுதிவரை கோல் அடிக்கவில்லை.
இதனால் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் மெக்சிகோ 6 புள்ளிகளுடன் முதல் அணியாக ‘ரவுண்ட் ஆஃப் 32’ (நாக் அவுட் சுற்று)- க்கு முன்னேறியுள்ளது.




