ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என விமானத்தில் செல்லும் நபர்களிடம் கொடுத்தனுப்பும் கண்ணீர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ் தான் தலிபான் வசம் சென்றுள்ளது. காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதும், அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான், இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நினைக்கும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். விமானத்தின் இறக்கைகளிலும், சக்கரங்களிலும் தொற்றிக் கொண்டு பலர் தப்ப முயன்ற காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
https://twitter.com/RT_com/status/1428416480845066240
இந்நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க ராணுவத்தினரிடமும், தப்பிச் செல்லும் நபர்களிடமும் தங்கள் குழந்தைகளை கொடுத்து அனுப்புகின்றனர். இதுதொடர்பான கண்ணீர் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








