உலகின் முதல் கேமரா வடிவ காரை, திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக் கியுள்ளார்.
திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் தமிழினியன் (33). மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர், சினிமா படங்களிலும் பணியாற்றி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் இலியானா பயன்படுத்தும் ஸ்கூட்டரை வடிவமைத்தது இவர்தான்.
தற்போது சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியத்தில் வைப்பதற்காக கேமரா வடிவ காரை இவர் உருவாக்கி இருக்கிறார். இந்த கார், உலகின் முதல் வுட்டன் பெல்லோ கேமரா போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவு ரூ.5 லட்சம். உலகப் புகைப்பட தினமான நேற்று இந்த காரை தனது நிறுவனத்தின் முன் இவர் நிறுத்தி இருந்தார். இதை ஏராளமானோர் அதிசயமாகப் பார்த்து சென்றனர்.
சிங்கப்பூர் விண்டேஜ் கேமரா மியூசியம் புகழ்பெற்றது. இங்கு ஆயிரத்துக்கும் மேலான விண்டேஜ் கேமராக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








