பழனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பழனியில் 7 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பழனி பாய்க்கடை தெருவில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
நூறு ரூபாய் பணம் கொடுத்தவர்களுக்கு டோக்கன் வழங்குவதாகவும், மேலும் பணம் கொடுத்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்துவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் முறையாக அறிவிப்பு பலகையிலும் எழுதவில்லை எனவும் அவர்கள் கூறினர்.







