அனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு அதை வகைப்படுத்த அனுமதி கோருவது ஏற்புடையது அல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பாலவிக்னேஷ் தாக்கல் செய்த மனுவானது, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருநெல்வேலியில் அனுமதியின்றி பல கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதை தடுக்க மாநாகராட்சி அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தீயணைப்பு வண்டிகள் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைக்கு போதிய இடம் இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு, அதன்பிறகு அதை வகைப்படுத்த வேண்டும் என அனுமதி கோருவது ஏற்படையது அல்ல எனக்கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







