சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாதத்திற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில், இதுவரை 10 லட்சம் தடுப்பூசி வந்துள்ளதாகவும், மீதமுள்ள 61 லட்சமும் தொடர்ந்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பதாக கூறினார்.
டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் 2 இடங்களில் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அவர், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர் மையத்தை மேம்படுத்தி 15 நாட்களில் பரிசோதனை அமைக்கப்படும் எனவும் கூறினார்.







