முக்கியச் செய்திகள் கொரோனா

உருமாறிய டெல்டா பிளஸ் வகை நுரையீரலை அதிகம் பாதிக்குமா?

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவிவரும், உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் நுரையீரலை அதிகமாக பாதிக்குமா என்ற சந்தேகம் மக்களிடையேயும், மருத்துவ நிபுணர்களிடையேயும் எழுந்துள்ளது.

கொரோனாவின் உருமாறிய புதிய வகை டெல்டா பிளஸ் இந்தியாவில் ஜூன் 11ம் தேதி கண்டறியப்பட்டது. இதுவரை 12 மாநிலங்களில் 51 பேர் அதிகாரப்பூர்வமாக டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவிட்-19, இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா, டெல்டா வகை வைரஸ்களை விட டெல்டா பிளஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்து பேசிய, நோய் எதிர்ப்பு சக்தியின் தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவரும் மருத்துவருமான என்.கே அரோரா, உருமாறிய டெல்டா பிளஸ் வகை வைரஸ்கள் நுரையீரல் திசுக்களை அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது என குறிப்பிட்டார். ஆனால் இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது வேகமாக பரவும் தன்மை கொண்டதா என்று இதுவரை உறுதிபட கண்டறியப்படவில்லை என்றும் கூறினார். மேலும் இதுவரை டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், குறைவான பாதிப்பே ஏற்பட்டிருப்பதாக் தெரிவித்த அவர், விரிவான விளக்கங்களுக்கு தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் எனக் கூறினார்.

டெல்டா பிளஸ் வைரசால் மூன்றாம் அலை வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அரோரா, அதுகுறித்து இப்பொழுது சரியாக கணிக்க முடியாது என தெரிவித்தார். புதிய உருமாறிய கொரோனா வைரசால் அடுத்தடுத்த அலைகள் ஏற்படுவதால் டெல்டா பிளஸ் வைரசாலும் மூன்றாம் அலை ஏற்படலாம் ஆனாலும் டெல்டா பிளஸ் குறித்த முழுமையான ஆய்வு முடிவுகள் வெளிவராததால், மூன்றாம் அலைக்கு இது காரணமாக இருக்குமா என்று கூறமுடியாது என தெரிவித்தார்.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மூன்றாம் அலை உருவாவதை கட்டுப்படுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும். எனவே தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அரோரா தெரிவித்தார்.

Advertisement:

Related posts

எலான் மஸ்க் போட்ட லைக்: சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த ரூ. 7 கோடி முதலீடு

Gayathri Venkatesan

கடன் தள்ளுபடி நீட்டிக்கப்படாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

எல்.ரேணுகாதேவி

பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் அணிகள் அபார வெற்றி!

Vandhana