முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக் கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆக்சிஜன் செறிவூட்டிகளை உயிரியல் மருத்துவ பொறியாளர்கள் சரி பார்க்க வேண்டும் என்றும், பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்களை அவசரக்கால பயன்பாட்டிற்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், N95 முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகளையும் மதிப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மருத்துவ மாணவர்கள், பாராமெடிக்கல் மற்றும் நர்சிங் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்கள் கூடுவதை தவிர்ப்பதோடு தடுப்பூசி மையம் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டுகளில் கூடுதலாக படுக்கைகளின் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்’ – பசுமை தீர்ப்பாயம்

Arivazhagan Chinnasamy

ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம்

Gayathri Venkatesan

35 புதிய பயிர் வகைகளை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

G SaravanaKumar