பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதிருப்தி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படாததை கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாஜக சார்பில்…

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படாததை கண்டித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் காளீஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தியபடி 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல், சேலம் மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஆதரவு விவசாயிகள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்துகொண்டு, கைகளில் கரும்பு, இளநீர் உள்ளிட்டவைகளை ஏந்தியவாறு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.