பிரபல நடிகையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்

கேரளாவில் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் ஆபாச செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தமிழ் மற்றும்…

கேரளாவில் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அபர்ணா முரளியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக்கல்லூரி மாணவரின் ஆபாச செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி தமிழ் மற்றும் கேரளா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆவார். இவர் சூரறைபோற்று படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தற்பொழுது கேரள திரைப்படமான தங்கம் திரைப்படத்தில் வினித் சீனிவாசன் உடன், அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். தங்கம் திரைப்படத்திற்காக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற இடங்களில் படத்தை அறிமுகம் செய்து வைக்கும் விழா நடந்துள்ளது.

அந்த வகையில் எர்ணாகுளத்தில் இயங்கிவரும் சட்டக்கல்லூரி ஒன்றில் இப்படத்தின் அறிமுக விழா நடந்தது. இந்த அறிமுக விழாவில் படத்தின் கதாநாயகன் வினித் சீனிவாசன் கதாநாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

விழா துவங்கிய சிறிது நேரத்தில் சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளிக்கு சிறிய பூங்கொத்து கொடுத்ததுடன் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இச்சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அங்கிருந்தவர்களால் ஆபாச செயலாகவும் கருதப்பட்டது. இதனால் அந்த சட்ட கல்லூரி மாணவரின் செயலுக்கு படக்குழு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகை அபர்ணா பாலமுரளியிடம், கல்லூரி சார்பாக அந்த மாணவர் மன்னிப்பு கேட்டுகொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.