முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா?, சட்டப்பேரவையில் காரசார விவாதம்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா? என்று அதிமுக மற்றும் திமுகவினரிடையே காரசாரமாக விவாதம் நடந்தது.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் கடந்த 18,19 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று சட்டப்பேரவை விவாதத்தின் போது 2021 சட்டமன்றத்தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாங்கள் செய்தீர்களா என நீங்கள் கேட்க, நீங்கள் செய்தீர்களா என்று நாங்கள் கேட்க வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இரண்டு பேருமே செய்யவில்லையோ என யோசிப்பார்கள் என்று பேசினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கிறீர்கள். இந்த அவையிலேயே 110 விதியின் கீழ் அம்மையார் ஜெயலலிதா படித்ததை எல்லாம் நீங்கள் செய்தீர்களா என நாங்கள் திருப்பி கேட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர் அசோக்குமார் பதிலளிக்க முடியாது என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய, எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி புள்ளி விவரமாக என்னென்ன செய்தோம் என்பதை சொல்லி இருக்கின்றோம் என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், வெளியே கொடுத்த வாக்குறுதியை கேட்டீர்களே?, இங்கு 110 விதியில் கொடுக்கும் வாக்குறுதி, அதை செய்யவில்லையென்றால் ‘Breach of Trust. அந்த வாக்குறுதியை நாளை விவாதம் வைத்துக் கொள்ளலாமா? எத்தனை வாக்குறிதிகள் நிறைவேற்றினீர்கள் என்பது குறித்து விவாதிக்கலாம் என்றார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 110 விதியில் கூறிய வாக்குறுதிகள் 90% நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில 110விதி அறிவிப்புகள், நிறைவேற்ற முடியாமல் போனது. மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளைதான் உறுப்பினர் கேள்வியாக கேட்டார் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், நாளை காலை அரை மணி நேரம் விவாதம் வைத்துக்கொள்ளலாமா? 110 விதியில் முழுவதுமாக நிறைவேற்றி விட்டீர்களா என்பதை பேசுங்கள், விவாதிக்கலாம் என்றார்.

தொடர்ந்து அவையில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அறிக்கையை இதே அவையில் சமர்ப்பித்துள்ளேன். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட எத்தனை அறிவிப்புகளுக்கு அரசாணை போடப்பட்டுள்ளது, எத்தனை திட்டங்களுக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை, அது சரியில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதை நாளை இந்த அவையில் வைக்கின்றோம். விவாதிக்கலாமா? என கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய எஸ்.பி.வேலுமணி, 2006-ல் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக நீங்கள் சொன்ன வாக்குறுதி என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இன்றைய விவாதம் முடிவுக்கு வந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆஸ்திரேலியாவில் சதமடித்து ஸ்மிருதி மந்தனா அபார சாதனை

EZHILARASAN D

முதல் முறையாக விம்பிள்டன் போட்டியிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய செரீனா !

Vandhana

ஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

Web Editor