87 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வான முன்னாள் முதலமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தள்ளாத வயதிலும், தணியாத ஆர்வத்தால் 87 வயதில் 10ஆம் தேர்வு எழுதி பாஸாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம்…

முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தள்ளாத வயதிலும், தணியாத ஆர்வத்தால் 87 வயதில் 10ஆம் தேர்வு எழுதி பாஸாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் .

ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு பதவி வகித்தார் ஓம் பிரகாஷ் சவுதாலா. இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவரான இவர், தமது ஆட்சி காலத்தில் ஆசிரியர் தேர்வாணைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை விசாரித்த டெல்லி நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதற்காக டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய திறந்தவெளி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, முதலில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அப்போது ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களில் வெற்றிப்பெற்றார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தண்டனை காலம் முடிவடைந்து சிறையில் இருந்து விடுதலையான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா தேசிய திறந்தவெளி நிலையத்தின் கீழ் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதினார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அந்த தேர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. உடனே பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கு கடினமாக பயிற்சி மேற்கொண்டார். அதில் 88 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றார். இதனையடுத்து அவரது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதிலும் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களை பெற தேர்வு மையத்திற்கு சென்ற அவர், செய்தியாளர்களிடம்,  ” இப்போது நான் ஒரு மாணவன் –  இப்போதுஅரசியல் கருத்துக்கள் எதற்கும் இடமில்லை,” எனக்கூறிவிட்டுச் சென்றது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த பல்வேறு பிரபலங்கள் அவருக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.