அதிமுக ஆட்சி ஹீரோ…. திமுக ஆட்சி ஜீரோ…..- ஜெயக்குமார் கருத்து

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது எனவும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை என்பதால் அதற்கு ஜீரோ மதிப்பெண் கொடுக்கலாம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  …

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது எனவும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்தும் எதுவும் நடக்கவில்லை என்பதால் அதற்கு ஜீரோ மதிப்பெண் கொடுக்கலாம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

நில அபகரிப்பு வழக்ககில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ஆஜராகிய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக ஆட்சியில் இருந்தது பொற்கால ஆட்சி எனவும் திமுக ஆட்சி ஒரு கற்கால ஆட்சி எனவும் குற்றம்சாட்டினார். பேருந்தில் சென்றால் நடத்துனருக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவர், திமுக கட்சியயை சேர்ந்தவருக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

ஆனால் அதிமுக ஆட்சியில் இது போன்று எந்த பிரச்சனையும் இல்லை என்ற அவர் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்றார். அதிமுக குறித்து டி.டி.வி தினகரன் கூறியது ஆச்சரிய படுவதற்கு இல்லை, அனைவரும் அதிமுகவின் செயல்பாடுகளை பாராட்டுவார்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

24 ம் தேக்கு முன் வேட்பாளர் பட்டியல் வரும் என்ற அவர், திமுகவின் ஓராண்டு ஆட்சிக்கு மதிப்பெண் ஜீரோ வழங்கலாம் என்றார். நாங்கள் ஹீரோவாக இருந்தோம் திமுக ஜீரோவாக உள்ளது என சாடிய ஜெயக்குமார், அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதே திராவிட மாடல் என கூறினார். அதிமுகவில் சசிகலா இணைப்பு குறித்து கருத்து கேட்டு கேட்டு புளித்து விட்டதாகவும் ஜெயக்குமார் சாடினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.