முக்கியச் செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது: பாகிஸ்தானுக்கு 2 வது வெற்றி

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டி- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. சார்ஜாவில் நேற்று நடந்த குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 20 பந்துகளில் 27 ரன்களும் தேவோன் கான்வே 24 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 25 ரன்களில் ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷாகின் ஷா அப்ரிதி, ஹபீஸ் , இமாத் வாசில் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் 33 ரன்களிலும் கேப்டன் பாபர் ஆசம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்தவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அனுபவ வீரர் சோயிப் மாலிக்கும் (27) ஆசிப் அலியும் (27) நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்குத் திருப்பினர். அந்த அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் சோதி 2 விக்கெட்டும், சான்ட்னர், டிம் செளதி, போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம் தேவை!

Halley karthi

விண்வெளி பயணம் மேற்கொள்ளும் இந்திய பெண் ஷிரிஷா பண்டாலா

25% குறைந்த சிமெண்ட் உற்பத்தி!