மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கைவினை மற்றும் உணவு கண்காட்சி

குன்னுராரில் மகளிர் தினத்தை முன்னிட்டு கைவினை மற்றும் உணவு கண்காட்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்று பலர் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மத்திய…

குன்னுராரில் மகளிர் தினத்தை முன்னிட்டு கைவினை மற்றும் உணவு கண்காட்சி நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்று பலர் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி சென்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் த்ரட்ஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு கைவினை மற்றும் உணவு கண்காட்சி நடைபெற்றது.

இதில் குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவினர் உல்லன் ஆடைகள், எம்ராய்டரி செய்த கை பைகள், திருமண அலங்கார உடைகள், தோடர் பழங்குடியினரின் எம்ராய்டரி ஷால் மற்றும் கூடை பைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

அதேபோல் பல்வேறு வண்ணங்களில் கேக்குகள், குழந்தைகளை கவரும் பல்வேறு வண்ண மற்றும் உருவங்களில் ஹோம்மேட் சாக்லெட் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியை காலை முதல் ஏராளமானோர் கண்டு களித்தனர். மேலும் பலரும் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு சென்றார்கள்.

-அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.