நெல்லை மாவட்டம் பழவூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள சங்கனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி
தொழிலாளி அஜித். இவரது மனைவி ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் சிவசக்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் குழந்தை தூங்கி கொண்டிருந்தபோது ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர் யாரோ ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி சென்றுள்ளனர்.
பின்னர் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தையைப் பார்த்தபோது காணவில்லை. ராஜேஸ்வரி அக்கம் பக்கம் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பழவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







