கனடா நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் உழைப்பாளி படத்தில் இடம்பெற்ற பாடலை இசைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி சிங்கப்பூர், ஜப்பான், கனடா போன்ற பல்வேறு நாடுகளில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் என்பது சொல்லிலடங்காதது. அதிலும் குறிப்பாக ரஜினிக்கென்று ஜப்பானில் அதிகளவு ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு காரணம் 1998-இல் டப்பிங் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியிடப்பட்ட முத்து திரைப்படம்தான். இந்தப் படம் அங்கு வெளியாகி ரூ.23.50 கோடி வசூல் செய்து புதிய சாதனையை நிகழ்த்தியது. இப்படத்திற்கு பிறகுதான் நடிகர் ரஜினிக்கு என்று அங்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளம் உருவாகியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜப்பானில் ரஜினிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, முத்து படத்திற்கு பிறகான அணைத்து படங்களும் அங்கு டப்பிங் செய்யப்பட்டு ஜப்பானில் திரையிடப்பட்டன. இன்றுவரை அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது அப்படியேதான் உள்ளது. இதுதவிர ஒவ்வொருமுறை ரஜினி படங்கள் வெளியாகும்போதெல்லாம் அவரது ஜப்பான் ரசிகர்கள் இந்தியாவுக்கு வந்து படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ஜப்பானை போன்றே கனடாவிலும் ரஜினிக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக, கனடாவின் டொரன்டோ நகரில் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்திற்காக போராடும் போது ரஜினியின் பாடலை ஒழிக்க விட்டு பலரது கவனத்தையும் பெற்றுள்ளனர்.
டொராண்டோ நகர தெருக்களில் ஆண், பெண் பேதமின்றி தினக்கூலி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு சமீபத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது ரஜினியின் ‘உழைப்பாளி’ படத்தில் இடம்பெற்றுள்ள, ‘உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை’ என்ற பாடலுக்கு அவர்கள் சாலையில் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Heard #Uzhaippali song playing on the streets of Toronto while crossing this place, at daily wage workers protest.
Far away from home, not too far away from Thalaivar vibes! ♥️ #Jailer pic.twitter.com/XAoJNQ14ap
— A N B A A N A • F A N (@Monish_SuriyaFC) June 4, 2023
- பி.ஜேம்ஸ் லிசா