முக்கியச் செய்திகள் தமிழகம்

குட்கா, கஞ்சா குறித்து நீங்கள் பேசுவதா… – காட்டமாக பதில் சொன்ன மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா, கஞ்சா குறித்து அதிமுக பேசுவதற்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதாக கூறினார். பள்ளிகள், கல்லூரிகளின் அருகிலேயே போதைப் பொருட்கள் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், 2 ஆயிரத்து 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை விட கைது எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா, கஞ்சா பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை என்று காட்டமாக கூறினார். கடந்த ஆட்சியில் குட்கா பற்றி பேசி அதை சட்டசபைக்கு கொண்டுவந்து காட்டியதே நான் தான் என்றும், அதிமுக ஆட்சியில் கடைசி 2 ஆண்டுகளில் 1.95 லட்சம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 12,910 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதையும் முதலமைச்சர் சுட்டிகாட்டினார்.

 

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 19,507 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டதாக கூறிய அவர்,அதிமுக ஆட்சியில் தவற விட்டதை திமுக ஆட்சியில் பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றும்,டிஜிபி, அமைச்சரெல்லாம் குட்கா விசாரணைக்கு சென்ற வரலாறு அதிமுக ஆட்சியில் இருந்ததாகவும் கூறினார். போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக வாட்ஸ் அப்பில் வருவதை கூறாமல், ஆதாரத்துடன் பேசினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் என்றும், பள்ளி, கல்லூரிகளின் அருகில் அதிகமாக விற்பனையாவதைத் தடுக்க வேண்டும் எனவும்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கஞ்சா பயன்படுத்துவதாகவும் கூறினார். வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பேசி ரயில்கள், பேருந்துகள், கடல் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது என்றும், அதனை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், குட்கா, கஞ்சா தமிழ்நாட்டில் பரவியதற்கு காரணமே அதிமுக ஆட்சி தான் என்றும், திமுக நடவடிக்கை எடுப்பதால் தான் கைது எண்ணிக்கை காட்டப்படுவதாகவும், இது நடவடிக்கை எடுக்கும் ஆட்சி என்றும் உறுதியளித்தார்.. குட்கா வழக்கில் தீர்ப்பு வரும் போது யார் குற்றவாளி என்பது தெரியப்போகிறது என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

காவிரி நதி மீது அனைத்து மாநிலத்திற்கும் உரிமை உண்டு: டி.ராஜா

Gayathri Venkatesan

பயணிகள் வருகை குறைவு: ஜூன் 16 வரை மேலும் சில ரயில்கள் ரத்து!

Halley Karthik

கொரோனா தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியா

Saravana Kumar