முக்கியச் செய்திகள் இந்தியா

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை: எல். முருகன்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முதலமைச்சர் ரங்கசாமியை, சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிப்மர் நிர்வாகம் 4 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதாகவும் அதில் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்தான் முதன்மை மொழி என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிர்வாக பயன்பாட்டிற்காக இந்தியை பயன்படுத்தலாம் என்று ஜிப்மர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எல். முருகன், இந்த விவகாரத்தில் வீணான அரசியல் வதந்திகள் திணிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். ஜிப்மரில் இந்தி திணிப்பு இல்லை என்று தெரிவித்த அவர், இந்த சுற்றறிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

சிலியில் இளம் வயது, இடது சாரி அதிபர்!

Halley Karthik

83 படத்திற்கு வரி விலக்கு அளித்த டெல்லி அரசு

Saravana Kumar

காணொலி வாயிலாக பேசிக்கொண்ட முகேஷ் அம்பானி – மார்க் ஸூக்கர்பெர்க்….ஆலோசித்தது என்ன?

Saravana