வேட்டையாடும் துப்பாக்கியால் நரிக்குறவரை சுட்டுவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்தவர் நரிகுறவர் முத்து. இவர் தமது நண்பருடன் கடந்த 29ம் தேதி கொட்டைபுஞ்சை பகுதிக்கு வேட்டைக்காக சென்றுள்ளார். அப்போது அங்க வந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் முத்துவிடம், வேட்டையாடியதை தருமாறு கேட்டுள்ளனர். எதையும் வேட்டையாடவில்லை என முத்து தெரிவித்ததால், அவரிடம் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியை பிடிங்கி அவரை சுட்டுவிட்டு, அங்கிருந்து 3 பேரும் தப்பி உள்ளனர். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோகன்தாஸ், சதீஷ், அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







