முக்கியச் செய்திகள் உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் – ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவப்படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 11, 2001ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருக்கும்போது, வளைகுடா நாடுகளில் நடைபெற்ற போரின்போது, இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதற்கு பலி வாங்குவதாகக் கூறி, அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் உள்ள உலக வர்த்த மையத்தின் மீதும், பென்டகனின் மீதும் விமானங்களை மோத வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்த 4 அமெரிக்க விமானங்களை கடத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 19 தீவிரவாதிகள் உட்பட 2,996 பேர் உயிரிழந்தனர். 21ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாகும். இந்த தாக்குதலுக்கு ஒஷமா பின் லேடன் தலைமையிலான தாலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாத படைகள் பொறுப்பேற்றன. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அன்று இரவே அப்போதைய அமெரிக்க பிரதமர் ஜார்ஜ் புஷ் சூளுரைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பீரங்கி வாகனத்தோடு அமெரிக்க ராணிவம்

அதன் அடிப்படையிலேயே 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவப்படைகள் அனுப்பட்டன. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலீபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாத இயக்கங்களை முழுமையாக ஒழிக்கும் வரை அமெரிக்கா ஓய்வெடுக்காது என அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க படைகள் சென்ற சில வாரங்களிலேயே தீவிரவாத இயக்கங்கள் மீதும், அவர்கள் பதுங்கி இருந்த இடங்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2011ம் ஆண்டு போர் உச்சத்தில் இருக்கும்போது அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் தலைவரான ஒஷமா பின் லேடனை, மே மாதம் 2ம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஒஷமா பின்லேடன்

அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கப்படைகள் திரும்பபெறப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அதவாது அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறும், செப்டம்பர் 11ம் தேதிக்கு முன்னதாக, அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்ப பெறப்பட்டால், ஆப்கானிஸ்தான் அரசுக்கு தாலீபான் மற்றும் மீதமிருக்கும் அல்கொய்தா தீவிரவாத இயக்கங்களால் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையுள்ளது.

அமெரிக்க ராணுவம்

இதற்கு பதிலளித்த அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி, ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உதவிகளும் செய்துத்தரப்படும் எனத் தெரிவித்தார். ராணுவப்படைகள் திரும்ப பெறப்பட்டாலும், பாதுக்காப்புக்கு தேவையான ராணுவ வீரர்கள் பணியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் பணி இதற்கு முன்னதாக இருந்தது போல இல்லாமல், பாதுகாப்பு பணியாக மட்டுமே இருக்கும் என அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மேலும் செயற்கைகோள் மூலம் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க அமெரிக்க தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஆப்கானிஸ்தானுக்கு சாதகாமாக அமையுமா அல்லது தீவிரவாத இயக்கங்களுக்கு சாதமாக அமையுமா என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Halley Karthik

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

Halley Karthik

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை வெளியாகிறது!

Saravana