அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார்.
செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், டிடிவி தினகரனின் நம்பிக்கைக்கு உரியவருமாகவும் இருந்தவர் பழனியப்பன். அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அவர் .ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் நெக்கம் காட்டியதால் அவர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவில் தொடர்ந்து செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடதக்கது.







