சென்னை அயனாவரத்தில் குப்பைத் தொட்டியில் துப்பாக்கி கிடந்ததை பார்த்து தூய்மைப்பணியாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை அயனவரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. தூய்மைப்பணியின் போது இதனை கண்ட தூய்மைப்பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த அயனவரம் போலீசார் தூய்மைப்பணியாளர்களிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றினர். அதில் 6 தோட்டாக்கள் இருந்தன.
குப்பைத்தொட்டியில் கிடைத்த துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையாக துப்பாக்கி கிடைத்த குப்பைத்தொட்டிக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், துப்பாக்கியை பெண் ஒருவர் வீசி சென்றது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாராணை மேற்கொண்ட போது அவரது பெயர் ஜெனிசா ஜோசப் என்பதும், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த ஜோசப் என்பவரின் மகள் என்பதும் தெரிவந்துள்ளது.
ஜோசப் மறைந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தும் போது இவை கிடைத்ததாகவும், அவற்றை வேண்டாம் என நினைத்து குப்பை தொட்டியில் வீசியதும் தெரிய வந்துள்ளது.








