குஜராத், இமாச்சலபிரதேசம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.   குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல இமாச்சலபிரதேச…

குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

குஜராத் மாநில சட்டசபையின் பதவி காலம் பிப்ரவரி 18-ந்தேதி முடிவடைகிறது. இதே போல இமாச்சலபிரதேச சட்டசபையின் பதவி காலம் ஜனவரி 8-ந்தேதி முடிகிறது. இதைத்தொடர்ந்து குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.

 

இந்த நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் கமிஷனின் செய்தியாளர் சந்திப்பு நடக்கிறது. இதில் குஜராத், இமாச்சலபுரதேச மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் அதிகாரிகள் சமீபத்தில் சென்று தேர்தல் பணி குறித்து ஆய்வு செய்து இருந்தனர். சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் மற்றும் 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலபிரதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.