ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகும் மிளிர்; வைரலாகும் மோஷன் போஸ்டர்

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார்…

ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

2015 ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின்மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்தில் இவர் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்க, பலரது பாராட்டினையும் பெற்றார். பின்னர் இவர் பாயும் புலி, ஆறாது சினம், போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின்னர் பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது மிளிர் என்னும் புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் இப்படத்தை சினிமா டூர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.சூர்யாதேவி தயாரிக்கிறார்.

படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லர் படமாக மிளிர் உருவாகி வருகிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.