முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

கல்லூரி மாணவியை கொலை செய்தது ஏன்? -சதீஷ் வாக்குமூலம்

சத்தியஸ்ரீயை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்யும் எண்ணத்திலே வந்ததாகவும்.பொதுமக்கள் சூழ்ந்ததால், தப்பியோடியதாக சதீஷ்  வாக்குமூலம்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்ததனர். சத்தியஸ்ரீ தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டு வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்தியஸ்ரீ உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மொத்தம் 7 தனிப்படை அமைத்துக் காவல் துரை சத்யாஸ்ரீயின் காதலன் சதீஷை தேடிவந்த நிலையில், துரைப்பாக்கம் அருகே பதுங்கி இருந்தவரைத் தாம்பரம் ரயில்வே போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்யிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஐந்து வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், அவரது வீட்டிற்குக் காதல் விவகாரம் தெரியவந்த நிலையில் கடந்த 7 மாதமாக சத்யாஸ்ரீ பேசாமல் இருந்து வந்துள்ளார்.அதனால், கடந்த மே 20 ஆம் தேதி தி நகரில் உள்ள கல்லூரிக்குச் சென்று அவரை கட்டாயப்படுத்திப் பேச முற்பட்டபோது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக மாம்பழம் காவல்துறையால் பிடித்துச் செல்லப்பட்டு  வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். அதை அடுத்து அவரிடம் தொடர்ந்து பேச முற்பட்டபோது அவர் பேச மறுத்ததாகவும், தனது அம்மா சொல்வதைத் தான் கேட்பேன் என்று சத்யஸ்ரீ தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் அவரது உறவினரான ராகுல் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் தன்னோடு வந்து விடுமாறு வற்புறுத்தியதாக கூறியுள்ளார். ஆனால் வரமறுத்த நிலையில், கல்லூரி செல்லும் நேரம் தனக்குத் தெரியும் என்பதால் அவரை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திலே வந்ததாகவும், ரயில் முன் சத்தியஸ்ரீயை தள்ளிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டவுடன், அவர்கள் தன்னை பிடிக்க முற்பட்டதாலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் மற்றும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி: ஜவாஹிருல்லா

Gayathri Venkatesan

அகத்தியர் மலையில் புதியவகை பட்டாம்பூச்சி!

எல்.ரேணுகாதேவி

தெலுங்கானாவில் குரங்கம்மை நோயால் ஒருவர் பாதிப்பு

G SaravanaKumar