ராஜஸ்தானின் கட்டு ஷ்யாம்ஜி கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட மகாராஷ்டிரத்தின் தூலே மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 16 பேரைக் கொண்ட குடும்பத்தினர், இன்று அதிகாலை காரில் சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இதனிடையே உதய்ப்பூர் – கோட்டா தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக புஜ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தகவலறிந்த ராணுவ அதிகாரிகளும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்..




