திருவண்ணாமலை தீபத் திருவிழா: 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் இலவச அனுமதி சீட்டுகள் – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக 3000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லா தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

தீபத் திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக 3000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமலா தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு
நல்லாட்சியின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு 3,000 பக்தர்களுக்கு இணைய வழியில் கட்டணமில்லாமல் தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தாண்டு புதிய முன்னெடுப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பொதுமக்களுக்கும் தீபத் திருவிழானின்போது சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பளிக்கும் வகையில் 1,500 அனுமதிச் சீட்டுகள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதம் 1,500 சீட்டுகள் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அனுமதிச் சீட்டுகளுக்கு பக்தர்கள் கணினி வாயிலாக குலுக்கள் முறையில் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளன; தேரிவு செய்யப்பட்டுள்ள பக்தர்களுக்கு அவர்களது கைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இணைய வழி அனுமதிச் சீட்டுக்கான இணைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான்று உரிய வழிமுறைகளின்படி திருக்கோயிலில்
சுவாமி தரிசனம் செய்திடலாம். உள்ளூர் பொதுமக்களுக்கும். பிற மாவட்டத்தை சேர்ந்த
பக்தர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கி பக்தர்கள் எளிதாகவும், சிரமமின்றி சுவாமி தரிசனம்
செய்வதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முள்னதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் தலைமையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை 18:11.23026 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், சாலைப் பாதுகாப்பு, அள்ளதானம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

திருவிழாகாலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கிரிவலப்பாதைகளில் பக்தர்கள் எவ்வித சிரமங்கள் இல்லாத வகையில் கிரிவலம் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.