நாளை பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல்…

தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், பள்ளிக்கு வரக்கூடிய 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவருந்தும் இடங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்களில் நோய் தொற்று பரவாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி

மேலும், முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளி, கிருமிநாசினி கொண்டு வகுப்பறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அன்றாட வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.