நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் இரு தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடவில்லை என தகவல் வெளியானது.

இது குறித்து நமது நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னையில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவது உறுதி என தெரிவித்தார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள்தான் இறுதி செய்வார்கள் எனவும் தெரிவித்தார். இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விஜய் மக்கள் இயக்கத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர்உயிரிழப்பு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில், சென்னையில் “விஜய் மக்கள் இயக்கம்” போட்டியிடுவது உறுதி என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.