மயிலாடுதுறையில் நடைபெற்ற அழகு போட்டியில் ராம்ப் வாக் சென்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து பேரை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடுத்தவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் அமைப்பு சார்பில் அழகு போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகத் திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து போட்டியாளர்களின் வற்புறுத்தலால் பாதுகாப்புக்கு வந்த காவல் துறையினர் ராம்ப் வாக் மேற்கொண்டனர்.
அண்மைச் செய்தி: ‘உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயர் பரிந்துரை’
இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், ரேணுகா, அஸ்வினி, நித்திய சீலா, சிவனேசன் ஆகிய காவலர்களை பணியிட மாற்றம் செய்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் இந்த ஐந்து காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








