மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் ஒதுக்கீட்டில் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை விமான நிலைய ஓடுபாதையை 2285 மீட்டரில் இருந்து 3810 மீட்டராக நீட்டிப்பதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் தமிழ்நாடு அரசிடம் 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டதாகவும் அதில் 543.41 ஏக்கர் நிலம் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 89.76 ஏக்கர் நிலத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது
இந்திய விமான நிலைய ஆணையம் இந்த வேலைகளின் கட்டுமான செலவு தோராயமாக 550 கோடி ரூபாய் என்றும் இதில் 138 கோடி ரூபாய் டெர்மினல் கட்டிடம் கட்ட செலவாகும் என தெரிவித்துள்ளது.
தற்போதைய ஓடுபாதை மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர பணிகள் 26.2 கோடி ரூபாய் செலவில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் மே, 2022ல் முடிக்கப்பட்டுள்ளன என்றும், மதுரை விமான நிலையத்தில் புதிய ஏர் டிராபிக் கன்ரோல் டவர் இமைப்பதற்கும், தொழில்நுட்ப ரீதியிலான பராமரிப்பு, பழுது நீக்கல், செயல்பாடு, டெக்னிக்கல் பிளாக் கட்டுமானம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான பராமரிப்பு ஒப்பந்த பணிகள் 99.02 கோடி மதிப்பில், பிப்ரவரி, 2024ல் நிறைவடைய வாய்ப்புள்ளது எனவும் அந்தப் பதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது