குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலி: 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை

குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலியாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல்…

குருநானக் கல்லூரியில் குழு மோதல் எதிரொலியாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இன்று காலை மாணவர்களிடையே மீண்டும் மோதல் வெடித்த நிலையில், ஒரு மர்மக்கும்பல் கல்லூரி வளாகத்துக்குள், நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தகவல் வெளியானது.

அது பலத்த சத்தத்துடன் வெடித்ததில், அங்கிருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கண்டனர். இந்நிலையில் குருநானக் கல்லூரியில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு அல்ல, சாதாரண பட்டாசு என்று சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட குழு மோதல் சம்பவம் தொடர்பாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.